சிக்மா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை: 1 மணி நேரத்தில் 4000க்கும் மேல் புக்கிங்!
சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'சிக்மா' திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் அதிரடியான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இன்று காலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் குவியத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக புக்மைஷோ தளத்தில் கடந்த ஒரே மணி நேரத்தில் மட்டும் 4,290க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் அறிமுக இயக்கம் என்ற ஆவலும், சுந்தீப் கிஷனின் ஸ்டைலிஷான நடிப்பும் இளம் தலைமுறை ரசிகர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான விளம்பரமும் தயாரிப்புத் தரமும் இதற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. நேர்மறையான முதல் நாள் தகவல்கள் பரவி வருவதால், மாலையிலும் இரவிலும் தியேட்டர்களில் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகும் நிலைக்கு முன்னேறி வருகின்றன. வார இறுதி நாட்களிலும் இந்த வேகம் நீடிக்கும் என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Ursvamsishekar