சிக்மா FDFS கொண்டாட்டம்: கமலா தியேட்டரில் கேக் வெட்டிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

சிக்மா FDFS கொண்டாட்டம்: கமலா தியேட்டரில் கேக் வெட்டிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர். தியேட்டருக்கு நேரில் வருகை தந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய், ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்ததோடு, பிரம்மாண்ட கேக் வெட்டி வெற்றிக் கொண்டாட்டத்திலும் பங்கேற்றார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படத்திற்கு தியேட்டர் வளாகத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் மலர் தூவியும் பூங்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். முதல் காட்சியிலேயே விறுவிறுப்பான காட்சிகளும் இசை அமைப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், ஒரு புதிய இளம் இயக்குநராக ஜேசன் சஞ்சய் தடம் பதித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அடுத்தடுத்த காட்சிகளுக்கும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்