ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400-க்கும் மேற்பட்ட திரைகளில் 'சிக்மா': நாளை பிரம்மாண்ட ரிலீஸ்!
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படமான 'சிக்மா' ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக பிரபல மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் அறிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் சந்தீப் கிஷனுக்கு இருக்கும் நல்ல மார்க்கெட்டும், தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீதான கவனத்தை தெலுங்கு திரையுலகிலும் எகிற வைத்துள்ளது. பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான முன்பதிவுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் 'சிக்மா' திரைப்படம் தொடக்க நாளிலேயே பலத்த வசூலை ஈட்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன.
· Ursvamsishekar