ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 க்கும் மேற்பட்ட திரைகளில் சிக்மா: மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியீடு!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இப்படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மைத்ரி மூவி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்று விநியோகஸ்தர் தங்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, கேத்தரின் தெரசா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நாளை முதல் திரையரங்குகளில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சாகசத்தைக் காண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
· Lyca Productions