'சிக்னல் அட் 11-30' பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

'சிக்னல் அட் 11-30' பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

சந்தோஷ் பிரதாப் மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள 'சிக்னல் அட் 11-30' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தை மலர்விழி நடேசன் இயக்கி தயாரித்துள்ளார். இவ்விழாவில் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், விதார்த், கதாநாயகிகள் பூஜிதா பொன்னடா, பாவ்யா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் மோகன் ராஜா, நடிகர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். டி. இமானின் இசையில் உருவான பாடல்களும், விறுவிறுப்பான டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்