மர்மங்கள் நிறைந்த சிக்னல் அட் லெவன் தர்ட்டி: டி.இமான் இசையில் விறுவிறுப்பான டிரெய்லர் வெளியானது
சந்தோஷ், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னடா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் படமான சிக்னல் அட் லெவன் தர்ட்டி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லஹரி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டிரெய்லர் த்ரில்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இக்கதைக்களத்தில், சந்தோஷ் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தொகுப்பாளர் கலை மற்றும் சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் ஆகியோரின் உழைப்பு டிரெய்லரின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. மிக விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj