சிம்புவின் எஸ்டிஆர் 47 படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் சூட்டல்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சிலம்பரசன் டிஆர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ள இப்படத்தை டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். வழக்கமான கௌதம் மேனன் படங்களின் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கிராமத்து இளைஞனாக மிகவும் மெலிந்த உடலமைப்போடு தோன்றும் சிம்புவின் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாமரை வரிகள், ராஜீவன் கலை இயக்கம் மற்றும் அந்தோணியின் படத்தொகுப்பு என தலைசிறந்த கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஒரு சாமானிய இளைஞனின் வாழ்க்கை எப்படி தாதா உலகத்தை நோக்கி நகர்கிறது என்ற இந்த ரா ஆக்ஷன் கதைக்களம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· VelsFilmIntl