சிம்புவின் அடுத்த ஆட்டம் 'கொரோனா குமார்': கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் புதிய அறிவிப்பு!
சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த கமர்ஷியல் திரைப்படத்திற்கு 'கொரோனா குமார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வீடியோ மூலம் அறிவித்து ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ரௌத்திரம் படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் அணிக்கான சிறப்பு பாராட்டுப் பாடல் ஒன்று இப்படக் குழுவின் சார்பில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து மாறுபட்ட கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த லோக்கல் இளைஞன் பாத்திரத்தில் சிம்புவை திரையில் காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
· VelsFilmIntl