உலகநாயகன் தயாரிப்பில் சிம்புவின் 'STR 48': விறுவிறுப்பாக துவங்கிய பிரம்மாண்ட பணிகள்!

உலகநாயகன் தயாரிப்பில் சிம்புவின் 'STR 48': விறுவிறுப்பாக துவங்கிய பிரம்மாண்ட பணிகள்!

சிலம்பரசன் டி.ஆர் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் பிரம்மாண்ட காவியத் திரைப்படமான 'STR 48' படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக பி.ஆர்.ஓ சதீஷ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் 56வது படமாக மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. 'ப்ளட் அண்ட் பேட்டில்' (Blood and Battle) என்ற மையக்கருத்தோடு ஆக்‌ஷன் களத்தில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்காக சிலம்பரசன் தற்காப்புக் கலைகளை தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறார். முதற்கட்ட வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், இப்படத்தின் பிரம்மாண்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

· Prosathish

பழைய செய்திகள்