சிம்புவின் அரசன் படப்பிடிப்பு தொடங்கியது: படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான ஸ்பெஷல் கிளிக்
நடிகர் சிலம்பரசன் டி.ஆரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் அட்டகாசமான புதிய தோற்றப் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. வெற்றிமாறன், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட அடுத்தடுத்த பெரிய இயக்குநர்களின் படங்களில் பிஸியாக இருக்கும் சிலம்பரசன், தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். அவரது புதுப்பொலிவான உடலமைப்பும் கம்பீரமான பார்வையும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் எஸ்டிஆர் ரசிகர்கள் இப்புகைப்படங்களை வைரலாக்கி வரும் நிலையில், படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
· @_movietamil