மீண்டும் காக்கி உடையில் சிலம்பரசன் டி.ஆர்: டிசம்பரில் தொடங்கும் அதிரடி புதிய படம்!
'அரசன்' படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிலம்பரசன் கம்பீரமான காவல் துறை அதிகாரியாக வலம் வரவுள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 'ஒஸ்தி' திரைப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ரசிகர்களைக் கவர்ந்த சிலம்பரசன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காக்கிச் சீருடையில் களமிறங்குவது எஸ்டிஆர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையாக இது உருவாக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது முந்தைய பணிகளை முடித்து வரும் சிலம்பரசன், டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் இணையவுள்ளார். படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil