'அரசன்' படத்தில் சிலம்பரசனின் கதாபாத்திரம் பெயர் 'தாஸ்': வெற்றிமாறன் இயக்கத்தில் மிரட்டும் நட்சத்திர கூட்டணி!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் (STR) நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'அரசன்' படத்தின் மிரட்டலான சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் சிலம்பரசன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'தாஸ்' (DAAS) என்ற முக்கிய தகவலை பி.ஆர்.ஓ சதீஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சிலம்பரசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் களம் இறங்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த கிளிம்ப்ஸில் சிம்புவின் ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ராஜாவுக்குப் பெயர் தாஸ் என்ற வாசகத்துடன் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் இச்செய்தியைக் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து படப்பிடிப்பு அப்டேட்கள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வரவிருக்கும் மாதங்களில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
· Prosathish