வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படப்பிடிப்பு தளம்: மிரட்டலான புதிய புகைப்படத்தை பகிர்ந்த சிலம்பரசன்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் சிலம்பரசன் தனது புதிய தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிலம்பரசனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெற்றிமாறனின் தீவிரமான கதைக்களத்தில் சிலம்பரசனும் விஜய் சேதுபதியும் இணையும் இக்காம்போ திரையுலகில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் சிலம்பரசனின் மாஸான லுக் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் அல்லது முதல் பார்வை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj