சிலம்பரசனின் 'வெந்து தணிந்தது காடு' தமிழக விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்: செப்டம்பர் 15 ரிலீஸ்

சிலம்பரசனின் 'வெந்து தணிந்தது காடு' தமிழக விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்: செப்டம்பர் 15 ரிலீஸ்

சிலம்பரசன் டி.ஆர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 15 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இந்த மூன்றாவது கூட்டணி கேங்ஸ்டர் கதைக் களத்தில் உருவாகியிருப்பது சினிமா ரசிகர்களிடையே பெருத்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. முத்து என்ற சாமானிய இளைஞன் மும்பை நிழல் உலக தாதாவாக மாறும் கதைக்களத்தைக் கொண்டுள்ள இந்த திரைப்படம், திரையரங்குகளில் சிம்பு ரசிகர்களுக்கு சிறந்த திரைப்பட விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Red Giant Movies

பழைய செய்திகள்