முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு: 'வெந்து தணிந்தது காடு' மிரட்டலான இரண்டாம் பார்வை போஸ்டர்!
சிலம்பரசன் டிஆர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இந்த வித்தியாசமான போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. முதல் போஸ்டரில் எளிய இளைஞனாகக் காட்சியளித்த சிம்பு, இந்த இரண்டாவது போஸ்டரில் மேலும் தீவிரமான ஒரு தோற்றத்தில் மிரட்டுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்திற்காக சிம்பு பல கிலோ எடையைக் குறைத்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை உருமாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் மும்பை கேங்ஸ்டர் பின்னணியில் தீவிரமான ஒரு வாழ்க்கை பயணத்தைப் பேசுகிறது. முற்றிலும் புதிய பாணியில் சிம்பு களமிறங்கியுள்ளதால் இத்திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு கவனிக்கத்தக்க படமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
· VelsFilmIntl