சிம்ரன் மற்றும் ஜெயராம் இணையும் புதிய படம்: படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவக்கம்
நடிகர் ஆர்யா மற்றும் தி ஷோ பீப்பிள் வழங்க, சிம்ரன் மற்றும் ஜெயராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ராட்சசி திரைப்படத்தின் மூலம் பாராட்டுக்களைப் பெற்ற எஸ்.ஒய். கௌதம்ராஜ் இப்படத்தை இயக்குகிறார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் திறமையான கலைஞர்கள் பலர் கைகோர்த்துள்ளனர். திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட சிம்ரன் மற்றும் ஜெயராம் இணைந்து நடிப்பதால், படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj