மனதை மயக்கும் மெலடி: பாடகர் மனோ வெளியிட்ட 'மௌன மொழிகள்' படத்தின் 'காதலியே' பாடல்!
ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான 'மௌன மொழிகள்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'காதலியே' அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மனதை வருடும் இனிய மெலடியாக உருவாகியுள்ள இப்பாடலை இந்திய திரையுலகின் புகழ்பெற்ற முன்னணி பின்னணிப் பாடகர் மனோ தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளம் இசையமைப்பாளர் நல இளந்திரையன் இசையமைப்பில் உருவான இப்பாடல், காதலின் ஆழமான அழகிய உணர்வுகளையும் பிரிவின் ஏக்கத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில் குடும்பக் கதையம்சத்தோடு அமைந்த இந்த திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருவதால் இசை ரசிகர்களிடையே இப்பாடல் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
· Actor Kayal Devaraj