நீண்ட இடைவெளிக்குப் பிறகு பின்னணி பாடிய எஸ்.என்.சுரேந்தர்: 'லவ் மேட்டர்' படத்தில் அசத்தல் பாடல்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பின்னணி பாடிய எஸ்.என்.சுரேந்தர்: 'லவ் மேட்டர்' படத்தில் அசத்தல் பாடல்!

பிரபல பின்னணிப் பாடகரும் டப்பிங் கலைஞருமான எஸ்.என்.சுரேந்தர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய திரைப்படத்தில் இனிமையான பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். செல்வ அன்பரசன் தயாரிப்பில் தயாராகும் 'லவ் மேட்டர்' (Love Matter) திரைப்படத்தில் அவர் பாடியுள்ள தகவலை சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகாதாரா பகவத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், "ஆரம்பம் ஆரம்பம்... ஜீவிதம் ஆரம்பம்" எனத் தொடங்கும் சுவாரசியமான பாடலை எஸ்.என்.சுரேந்தர் தனது கம்பீரமான குரலில் பாடியுள்ளார். எண்பது மற்றும் தொண்ணூறுகளில் மோகன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுக்கு உயிரோட்டமான பின்னணிக் குரல் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் எஸ்.என்.சுரேந்தர். மேலும் இவர் நடிகர் விஜய் அவர்களின் தாய் மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மைக் பிடித்திருக்கும் இவரது பாடல் படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இப்பாடல் வெளியீடு மற்றும் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்