ஹாலிவுட்டில் நடிகர் திலகம் சிவாஜி: 1962 அமெரிக்கப் பயணத்தின் அரிய நினைவுகள்!

ஹாலிவுட்டில் நடிகர் திலகம் சிவாஜி: 1962 அமெரிக்கப் பயணத்தின் அரிய நினைவுகள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1962 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சந்தித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளையும் புகைப்படத்தையும் நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் சிறப்பு அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற சிவாஜி கணேசனுக்கு, நயாகரா நகரத்தின் ஒரு நாள் கவுரவ மேயர் பதவி வழங்கி பெரும் மரியாதை அளிக்கப்பட்டது. ஹாலிவுட் திரையுலகிற்குச் சென்ற நடிகர் திலகத்தை சர்வதேச நட்சத்திரங்களான கார்ல்டன் ஹெஸ்டன், ஜேக் லெம்மோன், ஜேம்ஸ் கார்னர், வால்டர் பிட்ஜியன் மற்றும் ஜார்ஜ் சாண்ட்லர் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று அவருடன் பெருமையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உலகின் தலைசிறந்த கலைஞர்கள் தமிழ் சினிமாவின் நடிப்புச் சிகரத்தை நேரில் கண்டு பாராட்டிய நெகிழ்ச்சியான தருணம் அது. இந்த வரலாற்றுப் பயணத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக வெறும் 12 நாட்களில் மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்து முடித்த சாதனைப் படம்தான் 'பலே பாண்டியா'. தமிழ்த் திரையுலகின் கம்பீர அடையாளமாக உலக அரங்கில் திகழ்ந்த சிவாஜியின் இந்த அரிய தருணம் சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்