சிவாஜி கணேசனின் 'பராசக்தி': ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் பகிர்வு

சிவாஜி கணேசனின் 'பராசக்தி': ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் பகிர்வு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான வரலாற்றுப் புகழ்பெற்ற 'பராசக்தி' திரைப்படத்தின் அரிய படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 1952ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அனல் பறக்கும் வசனங்களை எழுதியிருந்தார். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய இப்படத்தில் 'சக்சஸ்' என்ற ஒற்றை வார்த்தையுடன் திரையில் அறிமுகமான சிவாஜி கணேசன், தனது கம்பீரமான குரல் வளத்தாலும் அசாத்திய நடிப்பாலும் தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி அமைத்தார். தமிழ் கலாச்சாரத்திலும் திரையுலகிலும் நீங்காத ஆதிக்கம் செலுத்திய பராசக்தி திரைப்படத்தின் இந்த அரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெருமிதத்துடன் பகிரப்பட்டு வருகின்றன. நீதிமன்றக் கூண்டில் சிவாஜி கணேசன் பேசிய அனல் பறக்கும் அடுக்குமொழி வசனங்கள் இன்றும் தமிழ் திரை வரலாற்றின் இணையற்ற சாதனையாகப் போற்றப்படுகின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்