விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் 'அமரன்': வரும் ஞாயிறு மதியம் 3.30 மணிக்கு சிறப்பு ஒளிபரப்பு!
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அமரன்' திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புரோமோ வீடியோவை விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர தீர வாழ்க்கையையும், அவருடைய குடும்பத்தின் ஈடு இணையற்ற தியாகத்தையும் கண்முன்னே நிறுத்திய இந்த படம் திரையரங்குகளில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் தேர்ந்த நடிப்பும் ஜி.வி. பிரகாஷின் உணர்ச்சிமிகு பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வசூலை அள்ளிய அமரன் திரைப்படம் தற்போது சின்னத்திரைக்கு வருவதால் சின்னத்திரை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஞாயிறு மதியம் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க அருமையான திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Vijaytelevision