தீபாவளிக்கு திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் அயலான்: ஏலியன் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

தீபாவளிக்கு திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் அயலான்: ஏலியன் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள அறிவியல் புனைகதைத் திரைப்படமான 'அயலான்' வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று தொழில்நுட்பக் குழுவான சின்க் சினிமா புதிய போஸ்டருடன் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. ஆர். ரவிகுமார் இயக்கத்தில் வேற்றுகிரகவாசியான ஏலியனை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிநவீன கிராபிக்ஸ் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையிலான சுவாரசியமான காட்சிகளுடன் தயாராகியுள்ள இப்படம் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டமாக வெளியாவது குடும்ப ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

· Synccinema

பழைய செய்திகள்