அயலான் பிரீமியம் லார்ஜ் பார்மட் வெளியீடு: எபிக் திரைகளில் ஏலியனின் அதிரடி வருகை!

அயலான் பிரீமியம் லார்ஜ் பார்மட் வெளியீடு: எபிக் திரைகளில் ஏலியனின் அதிரடி வருகை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான அறிவியல் புனைகதைத் திரைப்படமான 'அயலான்', அதிநவீன எபிக் பிரீமியம் லார்ஜ் பார்மட் திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதாக க்யூப் சினிமா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர் பிராட்வே சினிமாஸ் உள்ளிட்ட முன்னணி திரையரங்குகளில் இந்த சிறப்புத் திரையிடல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வேற்றுக்கிரகவாசி கதையம்சத்தில் பல ஆண்டுகள் மெனக்கெட்டு ஆயிரக்கணக்கான விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் உருவான திரைப்படம் அயலான். பிரம்மாண்டமான திரையில் துல்லியமான ஒலி அமைப்பு மற்றும் கண்கவர் காட்சிகளுடன் படத்தைக் காணும்போது பார்வையாளர்களுக்கு அலாதியான திரையரங்கு அனுபவம் கிடைக்கும் என்பதால், பிரீமியம் லார்ஜ் பார்மட் திரையிடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு குடும்பங்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் வெளியாகியுள்ள அயலான், தொழில்நுட்ப ரீதியாக ஒரு துணிச்சலான முயற்சியாக அமைந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

· Qubecinema

பழைய செய்திகள்