இனிமேல் பக்கா மாஸ் கமர்ஷியல் படங்கள் தான்: சேயோன் மற்றும் எஸ்கே 27 குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து ரசிகர்களிடையே உற்சாகமாகப் பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இனி முழுமையான மாஸ் கமர்ஷியல் என்டர்டெயினர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 27' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது என்றும், அதில் அறிமுக சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு தற்போது தொடக்கப் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' படத்தின் 60 சதவீதப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், சில முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். இரண்டு படங்களின் இயக்குநர்களும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்சிகளைச் செதுக்கி வருவதாகவும் அவர் கூறினார். இரண்டு திரைப்படங்களுமே திரையரங்குகளில் ரசிகர்களை முழுமையாகக் குஷிப்படுத்தும் அக்மார்க் கொண்டாட்டப் படங்களாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்தடுத்த அப்டேட்டுகளைப் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
· @_movietamil