குடும்பத்தோடு ரசிக்கும் பிரின்ஸ்: 5-வது நாளிலும் தொடரும் சிவகார்த்திகேயன் பட வசூல்!

குடும்பத்தோடு ரசிக்கும் பிரின்ஸ்: 5-வது நாளிலும் தொடரும் சிவகார்த்திகேயன் பட வசூல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் ஐந்தாவது நாளிலும் குடும்ப ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது. எந்தவித தயக்கமுமின்றி குழந்தைகளுடன் அனைவரும் குடும்பத்தோடு பார்த்து சிரித்து மகிழும் திரைப்படமாக இது இருப்பதாக திரையரங்கு நேர்காணலில் ரசிகர்கள் தெரிவித்துள்ள வீடியோவை கலக்கல் சினிமா வெளியிட்டுள்ளது. அனுதீப் இயக்கத்தில் உருவான இந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். சத்யராஜ் வழக்கம் போல தனது வித்தியாசமான நகைச்சுவை பாணியில் கலகலப்பூட்டியுள்ளார். தமனின் துள்ளலான பாடல்களும் சிவகார்த்திகேயனின் நடனமும் இளசுகளையும் குழந்தைகளையும் திரையரங்குகளில் உற்சாகப்படுத்தியுள்ளன. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது குடும்ப ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தீபாவளி விடுமுறை நாட்களில் குடும்பங்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வரும் சூழலில், பிரின்ஸ் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் நல்ல ஆக்குபன்சியுடன் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

· Kollywood Ent

பழைய செய்திகள்