சிவகார்த்திகேயனின் அடுத்த மெகா கூட்டணி: ராம்குமார் இயக்கத்தில் 'எஸ்கே 27' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

சிவகார்த்திகேயனின் அடுத்த மெகா கூட்டணி: ராம்குமார் இயக்கத்தில் 'எஸ்கே 27' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகன் சிவகார்த்திகேயன் நடிக்கும் 27ஆவது திரைப்படமான 'எஸ்கே 27' படத்தின் தயாரிப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளன என்று மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார். முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் போன்ற வித்தியாசமான மெகா ஹிட் படங்களை இயக்கிய திறமைமிகு இயக்குநர் ராம்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் இப்படத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் இணையும் இந்த கூட்டணி, நகைச்சுவை, சாகசம் மற்றும் மர்மம் நிறைந்த ஒரு புதுமையான சினிமா விருந்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் கதாநாயகி, பிற நட்சத்திரங்கள் மற்றும் படப்பிடிப்புத் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

· Nikil Murukan

பழைய செய்திகள்