எஸ்கே 27 படத்தில் இணைந்த சாய் அபயங்கர்: தம்பி எஃப்.டி.எஃப்.எஸ் தெறிக்கப்போகுது என சிவகார்த்திகேயன் வரவேற்பு!

சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் உறுதி செய்து, இசையமைப்பாளருக்கு அன்பான வரவேற்பு தெரிவித்துள்ளார். கட்சி சேர மற்றும் ஆச கூட போன்ற சுயாதீனப் பாடல்கள் மூலம் உலகளவில் பெரும் கவனம் ஈர்த்தவர் சாய் அபயங்கர். தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ள அவரை தம்பி என்று அன்போடு அழைத்துள்ள சிவகார்த்திகேயன், படக்குழுவில் அவரை வரவேற்பதில் மிகுந்த உற்சாகம் அடைவதாகவும், அவரது இசையில் முதல் நாள் முதல் காட்சி திரையரங்குகளில் பட்டாசாய் வெடிக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக சுதா கொங்கரா அல்லது சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இந்த பிரம்மாண்ட திட்டத்தில் இணைந்துள்ளது திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

· @_movietamil

பழைய செய்திகள்