'ரஜினியுடன் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன்': 'ஜெயிலர் 2' வாய்ப்பு கிடைத்த தருணத்தை விவரித்த எஸ்.ஜே.சூர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் நனவாகியுள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஜெயிலர் முதல் பாகம் வெளியான போதிலிருந்தே தலைவர் ரஜினிகாந்துடன் திரையைப் பகிரும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என ஆவலுடன் காத்திருந்ததாக எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இரண்டாம் பாகத்துக்காகத் தன்னை அணுகிய போது அடைந்த அளப்பரிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், அதை மனதால் மட்டுமே உணர முடிந்தது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் நடிக்கும் ஒவ்வொரு கணமும் தனக்கு கிடைத்த பொக்கிஷம் என அவர் கூறியுள்ளார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அசாத்திய நடிப்பால் தனி முத்திரை பதிக்கும் எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் ரஜினிக்கு இணையாக எந்த மாதிரியான அதிரடிக் களத்தில் மாஸ் காட்டப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

· @_movietamil

பழைய செய்திகள்