கோவா அரண்மனை செட் சென்னையில்: 'ஜெயிலர் 2' சுவாரசிய நினைவுகளைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சுவாரசியங்கள் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா சமூக வலைதளத்தில் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை முதலில் கோவாவில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அங்கு பெய்த தொடர் கனமழை காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இதனால் படப்பிடிப்பை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவுக்கு மாற்றினர். அப்போது கலை இயக்குனர், கோவாவில் அமைக்க நினைத்த பிரம்மாண்ட அரண்மனை செட்டை அப்படியே ஸ்டுடியோவுக்குள் தத்ரூபமாக மீண்டும் உருவாக்கிக் கொடுத்து படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தினார். பிரம்மாண்ட செட் என்பதால் லைட்டிங் பணிகளுக்குக் கூடுதல் நேரம் எடுத்ததாகவும், அந்த இடைவேளையில் படக்குழுவினர் அரட்டை அடித்து மகிழ்ந்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் இந்த திரைக்குப் பின்னால் நடந்த கதைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
· @_movietamil