ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு: சம்யுக்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய் சேதுபதி படக்குழு

ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு: சம்யுக்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய் சேதுபதி படக்குழு

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தபு மற்றும் சம்யுக்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' படக்குழுவினர் நடிகை சம்யுக்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் சம்யுக்தா இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் என்று படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் சுட்டிக்காட்டுகிறது. பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விஜய் சேதுபதியின் அதிரடியான நடிப்புடன் உருவாகும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் செல்வனின் மாறுபட்ட கெட்டப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்