ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு: நடிகை தபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு!
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' (SlumDog - 33 Temple Road) படக்குழுவினர், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை தபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா, ஜரினா வஹாப், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அழுத்தமான கதைக்களத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகக் கூர்மையாகவும் அனல் பறக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தபு இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
· Actor Kayal Devaraj