உலகளவில் ரிலீஸாகும் 'ராமாயணா': சர்வதேச டிரெய்லரை வெளியிடும் சோனி பிக்சர்ஸ்!

உலகளவில் ரிலீஸாகும் 'ராமாயணா': சர்வதேச டிரெய்லரை வெளியிடும் சோனி பிக்சர்ஸ்!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் உலகளாவிய விளம்பரப் பயணத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, படத்தின் சர்வதேச டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை அதிநவீன தொழில்நுட்பத் தரத்துடன் உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்படம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச விநியோக உரிமையைப் பெற்றுள்ள சோனி பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்தை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி முதல் 'ராமாயணா' திரைப்படம் உலகமெங்கும் உள்ள முன்னணி மற்றும் பிரீமியம் திரையரங்கு வடிவங்களில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. நாளை வெளியாகும் சர்வதேச டிரெய்லரைக் காண உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்