நாளை வெளியாகிறது 'ராமாயணா' சர்வதேச ட்ரெய்லர்: உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கும் சோனி பிக்சர்ஸ்!
தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கும் இதிகாசக் காவியமான 'ராமாயணா' திரைப்படத்தின் சர்வதேச ட்ரெய்லர் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. உலகளவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மாபெரும் பிரச்சாரத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் நாளை தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் காட்சிகள் ஐமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து உயர்தர பிரீமியம் திரைகளிலும் வெளியிடப்படவுள்ளன. வரும் நவம்பர் 5 அன்று உலகெங்கும் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் சர்வதேச ட்ரெய்லர் வெளியீட்டை இந்திய சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டம் சர்வதேச அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj