ரவிகுமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படம்: சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த பிரம்மாண்ட பூஜை

ரவிகுமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படம்: சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த பிரம்மாண்ட பூஜை

'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' படங்களின் மூலம் தனித்துவமான முத்திரை பதித்த இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில், முன்னணி நாயகனாக வலம் வரும் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது. பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூரி 7' என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். 'மந்தாடி' பட தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை ஆன் செய்தார். மேலும் இயக்குநர்கள் வெற்றிமாறன், நலன் குமாரசாமி, மித்ரன், ஏ.ஆர்.கே. சரவணன், மதிமாறன் உள்ளிட்ட முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தினர். விடுதலை, கருடன், கொட்டுக்காளி மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான மந்தாடி வரை தொடர்ந்து அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, அறிவியல் புனைகதை மற்றும் சுவாரசிய திரைக்கதைகளுக்குப் பெயர்போன ரவிகுமாருடன் இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுவீச்சில் துவங்கவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்