புக்மைஷோவில் 3வது திங்கள்கிழமையிலும் சாதனை படைத்த சூரியின் 'மந்தாடி'

புக்மைஷோவில் 3வது திங்கள்கிழமையிலும் சாதனை படைத்த சூரியின் 'மந்தாடி'

சூரி நடிப்பில் வெளியான 'மந்தாடி' திரைப்படம் வார நாட்களிலும் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. படத்தின் மூன்றாவது திங்கள்கிழமையான நேற்று மட்டும் புக்மைஷோ செயலியில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி, 3வது திங்கட்கிழமை அதிக டிக்கெட் விற்ற திரைப்படங்களின் வரிசையில் ஆல்-டைம் 4வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இப்படத்தின் வசூல் வேகம் சிறிதும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களைப் போன்றே வார நாட்களிலும் பார்வையாளர்கள் குடும்பத்தோடு திரையரங்குகளுக்குப் படையெடுப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காகப் பார்க்கப்படுகிறது. மக்களின் வாய்மொழிப் பாராட்டுகளால் தொடர்ந்து கல்லாகட்டி வரும் 'மந்தாடி', இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களின் பட்டியலில் தனது இடத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்