சூரி திரை வரலாற்றில் புதிய வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் மந்தாடி!

சூரி திரை வரலாற்றில் புதிய வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் மந்தாடி!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் சுகாஸ் நடிப்பில் வெளியான 'மந்தாடி' திரைப்படம் உலகளவில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. கதாநாயகனாக சூரி நடித்த படங்களில் மிக அதிக வசூல் ஈட்டிய படமாக இது மாறியுள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்த சூரி, ஒவ்வொரு படத்திலும் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 'மந்தாடி' படத்தில் எமோஷன் மற்றும் ஆக்ஷன் கலந்த இவரது நடிப்பு திரையரங்குகளில் பொதுமக்களிடையே ஏகோபித்த பாராட்டைப் பெற்று குடும்ப ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'மந்தாடி' படத்தின் வெற்றி, கதையின் நாயகனாக சூரியின் மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் அடுத்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

· @xpresscinema

பழைய செய்திகள்