25வது நாளில் மண்டாடி: 325 திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற சூரி

25வது நாளில் மண்டாடி: 325 திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற சூரி

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான மண்டாடி திரைப்படம் 25வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளதை முன்னிட்டு படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நடிகர் சூரி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல புதிய திரைப்படங்கள் வெளியான நிலையிலும், மண்டாடி திரைப்படம் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் 325 திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தனது திரையிடலைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு மக்கள் தரும் ஆதரவை இப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது. சூரியின் யதார்த்தமான நடிப்பு மற்றும் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், படம் வெள்ளி விழா நோக்கி முன்னேறி வருகிறது.

· @tamilcinexpress

பழைய செய்திகள்