சூரியின் மண்டாடி படத்திற்கு எகிறும் மவுசு: ஒரே மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று சாதனை
தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் வெளியாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. திரையரங்குகளில் படம் வெளியான நிலையில், இணையதள டிக்கெட் முன்பதிவு தளமான புக் மை ஷோவில் கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,240 டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு திரையுலக வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவை நடிகராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி, தற்போது அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூரி, மண்டாடி படத்தின் மூலம் மீண்டும் குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதைக்களமும் விறுவிறுப்பான காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளதால், வார இறுதி நாட்களில் படத்தின் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப நாள்களிலேயே டிக்கெட் விற்பனையில் வேகம் காட்டி வரும் மண்டாடி திரைப்படம், தமிழக பாக்ஸ் ஆபிசில் வலுவான வசூல் சாதனையை படைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
· @_movietamil