தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்த சூரி, சத்யராஜின் மந்தாடி: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வெற்றி விழா!

தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்த சூரி, சத்யராஜின் மந்தாடி: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வெற்றி விழா!

நடிகர் சூரி, சுஹாஸ், சத்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற 'மந்தாடி' திரைப்படம் வெற்றிகரமாகத் தனது 50-வது நாளை எட்டியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு 50 நாட்களைக் கடந்து வெற்றிநடை போடும் மகிழ்ச்சியான தகவலைப் படக்குழுவினர் பிரத்யேக போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் மதி மாறன் இயக்கத்தில், ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார். கடலோர மக்களின் வாழ்வியல் போராட்டத்தையும் அழுத்தமான ஆக்‌ஷன் காட்சிகளையும் மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் பீட்டர் ஹெய்ன் மற்றும் திலீப் சுப்பராயன் அமைத்த அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றன. சமீபகாலமாக புதிய திரைப்படங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஓடிடி தளங்களுக்கு வரும் சூழலில், திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டி ரசிகர்கள் கூட்டத்தோடு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது படக்குழுவினரையும் திரையரங்கு உரிமையாளர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்