5-வது வாரத்தில் மாபெரும் வெற்றி நடை போடும் சூரியின் 'மந்தாடி': திரையரங்குகளில் தொடரும் ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடிகர் சூரி, சத்யராஜ் மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'மந்தாடி' திரைப்படம் வெற்றிகரமாக 5-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். திரையரங்குகளில் படம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சூரியின் எதார்த்தமான நடிப்பு, சத்யராஜின் கம்பீரமான கதாபாத்திரம் மற்றும் பீட்டர் ஹெய்ன் அமைத்த அதிரடி சண்டைக் காட்சிகள் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. குடும்பங்கள் கொண்டாடும் படமாக மந்தாடி மாறியுள்ளது. வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் தடம் பதித்துள்ள 'மந்தாடி', இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பல புதிய திரைப்படங்கள் வரிசையாக களமிறங்கிய நிலையிலும், மந்தாடி திரைப்படத்திற்கான வரவேற்பும் காட்சிகளும் தொடர்ந்து நீடித்து வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
· Actor Kayal Devaraj