உலகளவில் ரூ.150 கோடி வசூல் வேட்டை: 'மந்தாடி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை படக்குழுவுடன் கொண்டாடிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

உலகளவில் ரூ.150 கோடி வசூல் வேட்டை: 'மந்தாடி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை படக்குழுவுடன் கொண்டாடிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் 'மந்தாடி' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை, அதன் தமிழக விநியோகஸ்தரான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படக்குழுவினருடன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மதி மாறன் இயக்கத்தில், ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் துள்ளலான இசை மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அசத்தியுள்ளது. அத்துடன் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்த வசூலைக் குவித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காமெடி நடிகராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கி தற்போது முன்னணி கதாநாயகனாக அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் சூரியின் வளர்ச்சி ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மந்தாடி திருவிழா திரையரங்குகளில் தொடர்ந்து நீடித்து வருவதால், படக்குழுவினருக்குத் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்