நெட்பிளிக்சில் முதலிடம் பிடித்து சாதனை படைக்கும் சூரியின் 'மாண்டாடி': தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி!
திரையரங்குகளில் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த சூரி மற்றும் சத்யராஜ் கூட்டணியின் 'மாண்டாடி' திரைப்படம், தற்போது நெட்பிளிகஸ் ஓடிடி தளத்திலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனை படைத்து வருவதாக ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. மண் சார்ந்த எதார்த்தமான கிராமத்துக் கதை, நெஞ்சைத் தொடும் குடும்ப உணர்வுகள் மற்றும் சூரியின் இயல்பான முதிர்ச்சியான நடிப்பு ஆகியவை தமிழக எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் மக்கள் வெள்ளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே, டிஜிட்டல் தளத்திலும் முதலிடத்தைப் பிடித்திருப்பது மாண்டாடி படத்தின் வலுவான கதைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாரின் உயிரோட்டமான இசை மற்றும் மதிமாறனின் விறுவிறுப்பான இயக்கம் படத்திற்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. திரையரங்கம் மற்றும் ஓடிடி என இரண்டிலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த இரட்டை வெற்றியை படக்குழுவினர் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
· Red Giant Movies