திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் கலக்கும் 'மந்தாடி': நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நம்பர் 1 டிரெண்டிங்!

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் கலக்கும் 'மந்தாடி': நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நம்பர் 1 டிரெண்டிங்!

நடிகர் சூரி மற்றும் சத்யராஜ் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'மந்தாடி' திரைப்படம், திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருவதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் மகிமா நம்பியார், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் துடிப்பான இசை மற்றும் பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. ஒருபுறம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே, மறுபுறம் ஓடிடியிலும் வெளியாகி குடும்ப ரசிகர்கள் மத்தியில் 'மந்தாடி' மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சூரியின் அழுத்தமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் மீண்டும் கவர்ந்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்