சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் புதிய கூட்டணி: அறிவிப்பு டீசர்
தமிழ் திரையுலகில் புதிய சுவாரசியமான கூட்டணியாக எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் இணைந்து தங்களின் 5வது பிரம்மாண்ட தயாரிப்பை அறிவிக்கவுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னோட்டப் பதிவு எக்ஸ் தளத்தில் வெளியாகி சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் தலைமையிலான எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த கூட்டணியில் இணையப் போகும் இயக்குநர் யார், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் யார் என்பது குறித்த பல்வேறு சுவாரசியமான யூகங்கள் கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே சுற்றத் தொடங்கியுள்ளன. சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் மிகப்பெரிய முக்கிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளதால் இந்த புதிய புராஜெக்ட் மீது அதிக ஆவல் எழுந்துள்ளது. விரைவில் படத்தின் பூஜை குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.
· Idiamondbabu