திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் 'லியோ': டிக்கெட் முன்பதிவை அறிவித்த ஸ்ரீ கோகுலம் மூவிஸ்!
கேரளாவின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தளபதி விஜயின் 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பதிவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேரளாவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக விநியோகம் செய்துள்ளன. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் அனல் பறக்கும் நடிப்பு கேரள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக கேரளத் திரையரங்குகளில் ஓடிவரும் லியோ படத்தை வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு மையங்களில் கூடுதல் காட்சிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
· MalayalamReview