'அவராச்சன் அண்ட் சன்ஸ்': ஜேசனாக மாஸ் காட்டும் ஸ்ரீநாத் பாஸி, அக்டோபர் 2 திரையரங்குகளில்!
லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள 'அவராச்சன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்திலிருந்து ஸ்ரீநாத் பாஸியின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 'ஜேசன்' என்ற துடிப்பான வேடத்தில் ஸ்ரீநாத் பாஸி தோன்றுகிறார் என்பதை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தம்பி இயக்கியுள்ள இப்படத்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பாஸி, வினய் போர்ட் மற்றும் கணபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் வேடிக்கையான சம்பவங்களையும் குழப்பங்களையும் சுவாரசியமான நகைச்சுவைத் திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகப் படக்குழு தெரிவிக்கிறது. இளமைத் துடிப்பான நடிப்பால் இளைஞர்களைக் கவரும் ஸ்ரீநாத் பாஸியின் கதாப்பாத்திரம் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தியை ஒட்டி திரையரங்குகளில் ரிலீஸாகும் இந்த மலையாளக் காமெடி கலாட்டா, ரசிகர்களுக்கு தியேட்டரில் கலகலப்பான சிரிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Apifilms