ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு: ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணையும் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு இன்று தொடங்கியது!
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் பான்-இந்தியா திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு இன்று முறைப்படி தொடங்கியது. தெலுங்கு திரையுலகின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் இந்த வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தை பிஆர்ஓ டயமண்ட் பாபு உறுதிப்படுத்தியுள்ளார். டிவிவி தனய்யா தயாரிப்பில் உருவாகும் இந்த வரலாற்றுத் திரைப்படத்தில் அல்லூரி சீதாராம ராஜுவாக ராம் சரணும், கொமரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குநரான ராஜமௌலி இயக்கும் படம் என்பதால், இப்படம் தொடங்கும் போதே ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
· Idiamondbabu