ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் அடுத்த படம்: அழகான காதல் கதையுடன் நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் அடுத்த படம்: அழகான காதல் கதையுடன் நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 19வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது. புதிய திறமையாளர்களை தொடர்ந்து ஆதரித்து வரும் இந்நிறுவனம், இம்முறை ஒரு அழகான காதல் கதையை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சினிமா ஊடகங்கள் ஆவலுடன் பகிர்ந்து வருகின்றன. இத்திரைப்படத்தை ராஜேந்திர பாலா எழுதி இயக்குகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பணியாற்றுகிறது. இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு ப்ரோமோ நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. கதாநாயகன், கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் பற்றிய முழு விவரங்களும் நாளைய ப்ரோமோவில் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Only Kollywood

பழைய செய்திகள்