தெலுங்கில் தடம் பதிக்கும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச்: அக்டோபர் 12-ல் டைட்டில் ப்ரோமோ ரிலீஸ்!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ப்ரோமோ அக்டோபர் 12 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 19-வது தயாரிப்பாகவும், தெலுங்கு திரையுலகில் அவர்களின் முதல் நேரடி தயாரிப்பாகவும் உருவாகிறது. தமிழில் தரமான திரைப்படங்களையும் ஆந்தாலஜிகளையும் தயாரித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்த நிறுவனம், இப்போது டோலிவுட்டிலும் புதிய கதைகளத்துடன் களமிறங்குவது சினிமா வட்டாரத்தில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. அக்டோபர் 12 அன்று வெளியாகவுள்ள டைட்டில் ப்ரோமோ மூலம் படத்தின் நாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். கார்த்திக் சுப்பராஜ் பட்டறையிலிருந்து வெளியாகும் அடுத்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar