கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் ‘ஹைட் அண்ட் சில்க்’: சுஹாஸ் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தெலுங்கு திரைப்படத்திற்கு ‘ஹைட் அண்ட் சில்க்’ (Hide and Silk) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோவுடன் படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் திறமைமிக்க நடிகர் சுஹாஸ் மற்றும் சங்கீர்த்தனா விபின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜேந்திர பாலா எழுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் தயாரிக்கின்றனர். மலையாளத்தில் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் அற்புதமான இசையால் ஈர்த்த அம்ரித் ராம்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சேலை நெசவு மற்றும் விதியோடு தொடர்புடைய அழகான காதல் பயணமாக இக்கதை உருவாகிறது. கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு என்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் ‘ஹைட் அண்ட் சில்க்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தகவல்கள் விரைவில் வெளியாகும்.
· Ursvamsishekar